யாழ்ப்பாணத்தில் இருந்து முழங்காவில் வழியாக மன்னார் நோக்கி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதால் ஒருவர் படுகாயம் அடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவமானது நேற்று(13.04.2023) வியாழக்கிழமை இரவு 9.30 மணி அளவில் யாழில் இருந்து மன்னார் நோக்கி பயணமாகிக் கொண்டிருந்த கார் முழங்காவில் பகுதியில் இருக்கும் பொலிஸாரின் வீதி சோதனைக்கு மறித்த போது காரை நிறுத்தாமல் சென்றதால் குறித்த கார் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சம்பவத்தில் காயமடைந்தவர் நவாலி மாணிப்பாயை சேர்ந்த செல்வ மகேந்திரன் கமலாரூபன் (36) என்பவராகும்.
இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் முருங்கன் வரை பயணித்து அங்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை பற்றி மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



