மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவாங்கரை மற்றும் எழுவாங்கரைப் செல்வதற்கு இலங்கையில் இருக்கும் மிக நீளமான வழியாக காணப்படும் மட்டக்களப்பு வாவியாகும்.
இவ்வாவியை கடந்தே இரு பகுதிக்குமான போக்குவரத்து ஆக காணப்பட்ட நிலையில் மக்கள் தங்களுடைய உடைமைகளுடன் இவ்வளவு காலமாக இந்த பாதையை பயன்படுத்தி கடந்து சென்று வந்துள்ளார்கள்.
இவ்வாறு இருக்கையில் திடீரென கடந்த 1.04.2023 தொடக்கம் பாதையில் பயணிப்பதற்கு கட்டணம் அளவிடப்படும் என பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த நிதி அறைவீடு செயல்பாடு இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இது இவ்வாறு இருக்கையில் கடந்த சனிக்கிழமை (15) படகு பாதையில் செல்லும் பயணிகளிடம் நிதி அறவீடு செய்வதாக திகதி மாற்றப்பட்டு நிதியை வசூலிப்பதற்காக பற்றுச் சீட்டுடன் பொறியலாளர்கள், மற்றும் நிதி அறவீடு செய்யும் உத்தியோகத்தர்களும் திடீரென வருகை தந்து பாதையில் செல்வதற்கு நிதி அறவீடு செய்த பின்பு பாதையில் பயணம் செய்வதற்கு அனுமதித்தனர்.
இந்த செயலுக்கு மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததால் இதனால் குறித்த 2 படகு சேவையானது முற்பகல் 11.39 மணிவரையில் சேவையிலீடுபடலிலை.
மக்களின் கருத்து
தான் இதுவரைக்கும் எவ்வித கட்டணங்களும் இல்லாமல் இந்த படகு சேவையில் பயணம் செய்ததாகவும் தற்போது திடீரென இந்த நிதி அறவீடு செய்வதை வீதி அபிவிருத்தி திணைக்களம் உடனடியாக கைவிட வேண்டும் எனவும் இதற்குத்தான் எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் பயணிகளும் மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அங்கு வந்திருந்த பொறியியலாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் தங்களுக்கு மேலிடத்திலலிருந்து அந்த உத்தரவின் பெயரில் தான் இந்த நிதி அறவீடு செய்யப்படுவதாக தெரிவித்தனர்.
நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக வருகை தந்த களவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பயணிகளிடமும் பொதுமக்களிடமும் அங்குள்ள அதிகாரிகளிடமும் கலந்துரையாடினார்.
இதன் போது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போக்குவரத்துக்கு யாரும் தடை ஏற்படுத்த முடியாது உங்களுடைய பிரச்சனைகளை உரிய அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவித்ததை அடுத்து மீண்டும் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டது.
படகு சேவைக்கான கட்டணம்
12 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 ரூபாய், துணிச்சக்கர வண்டி ஓட்டுனருன் 30 ரூபா, மோட்டார் சைக்கிள் ஓட்டுனருன் 50 ரூபா, ஆட்டோ ஓட்டுனருன் 100 ரூபா, கார்,வேன், பிக்கப் ஓட்டுனருன் 250 ரூபாவும் அறவீடு செய்யப்பட்டதுடன் மற்றும் பாடசாலை சீருடையில் காணப்படும் மாணவர்களுக்கும் மற்றும் அரச வாகனங்களுக்கும் இலவசமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



