(srilanka tamil news) இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளுக்கு அருகே ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று (ஏப்ரல் 25) அதிகாலை 3.00 மணியளவில் ஆழ்கடல் பகுதியில் சுமார் 84 கிலோமீட்டர் உள்நாட்டில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதன் பின்னர் பல அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மேற்கு சுமத்ரா கடற்கரைக்கு அருகில் உள்ள மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
Tags:
srilanka



