நாளை தனியார் ஊழியர்கள் வேலைக்கு செல்லக்கூடாது என வேண்டுகோள்: வடக்கு தனியார் வர்த்தக ஊழியர் சங்கம்

tamillk.com


வடக்கு மாகாணத்தை சேர்ந்த ஊழியர்கள் யாரும் நாளைய தினம் வேலைக்கு செல்லக்கூடாது என வட மாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.



இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் சிவக்குமார் இதனை தெரிவித்துள்ளார்.



நாளை நடைபெற இருக்கும் நிர்வாக முடக்கத்தில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இராணுவ மயமாக்கலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அத்தோடு பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கையுடன் 7 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்