கொழும்பின் பல பகுதிகளில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது

 

tamillk.com

கொழும்பின் பல புறநகர் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


டுவிட்டர் செய்தியில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


கொலன்னாவ 132 கிலோவொட் உப மின் நிலையத்தில் கேபிள் வெடித்துச் சிதறியதன் காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக திரு.விஜேசேகரவின் டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால், கொழும்பு 4, 5, 7, 8, 10, 12 மற்றும் பல புறநகர்ப் பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதுடன், கொழும்பு 4, 5, 7 ஆகிய இடங்களில் தற்போது மின்சாரம் வழமைக்குத் திரும்பியுள்ளது.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்