சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு எதிர்ப்பு:- சூழல் ஆர்வலர்

tamillk.com


இலங்கையில் இருக்கும் சில வகை குரங்கு வகைகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அரசாங்கத்தினால் குழுவொன்றை நியமிக்கப்பட்டுள்ளது பற்றி சூழல் விவகாரங்களின் சட்டத்தரணி கலாநிதி ஜகத் குலவர்த்தன கேள்வி எழுப்பினார்.

இலங்கை நாட்டில் சில வகை குரங்கு வகைகள் காணப்படும் நிலையில் அவை அனைத்தும் பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதாக என்றால் அவைகளுக்கான மாற்று வழியான விஞ்ஞான ரீதியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

அதேபோன்று சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் குரங்கு வகைகள் அந்த நாட்டின் காலநிலைக்கு ஏற்ற வகையில் காணப்படுமா போன்ற விடயங்களை ஆராய வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சீனாவுக்காக ஏற்றுமதி செய்யப்படும் குரங்கு வகைகள் அனைத்தும் சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு  இவ்வளவு பெருந்தொகையான குரங்குகள்  தேவைப்படுகின்றது என்ற கேள்வியும் எழுந்துள்ளது என தெரிவித்தார். இந்த நிலையில் சூழல் மாசடையும் என்ற அடிப்படையில் சட்டப்படி சூழல் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மாத்திரம் விலங்குகளை ஏற்றுமதி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஏற்றுமதி செய்யப்படும் குரங்குகளை விஞ்ஞான ஆராய்ச்சிக்காக ஏற்றுமதி செய்ய முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்