ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை இன்று (ஏப்ரல் 13) அறிவிக்கவுள்ளன.
நாட்டின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முன்னேற்றத்தை மேலும் அதிகரிக்கும் நோக்குடன், இது தொடர்பான வேலைத்திட்டம் தற்போது அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்று வரும் 2023 வசந்தகால மாநாட்டுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அந்த நாடுகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆதரவளிப்பதாக முன்னர் அறிவித்திருந்தன.
Tags:
srilanka



