யாழ்ப்பாணத்தில் கருவாட்டுக் கடைகள் திடீர் பரிசோதனை!

tamillk.com


சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்களால் யாழ் - காங்கேசன் துறையில் அமைந்துள்ள கருவாடு கடைகள் அனைத்தையும் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திடீர் பரிசோதனையானது யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பாலமுரளியின் அறிவுறுத்தலின் படி பொது சுகாதார பரிசோதகர் மற்றும் மாநகர பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இன்று (12.04.2023) பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

tamillk.com


இதன்படி இந்த பரிசோதனையின் போது கருவாடு கடைகள் அனைத்தும் வீதியோரங்களில் வைக்கப்பட்டு இருப்பதால் தூசிகளினால் மாசடைய கூடியதாக காணப்படுவதால் இது குறித்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கருவாடுகளை குத்தி தொங்கவிடும் கம்பிகள் அனைத்தும் துருப்பிடித்து காணப்படுவதாகவும் இவற்றை உடனடியாக சீர் செய்யுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

tamillk.com


மேலும் கருவாடுகளை கண்ணாடி பெட்டிகளில் வைத்து விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில் இவை அனைத்தையும் ஒரு வார காலத்திற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பின்வரும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யவில்லை எனில் அந்த வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்