(srilanka tamil news) ஹம்பாந்தோட்டை கடற்கரையில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடலில் இன்று (ஏப்ரல் 24) அதிகாலை 12.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி அபாயம் எதுவும் இல்லை என பணியகம் தெரிவித்துள்ளது.
Tags:
srilanka



