பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களும் அடையாள அட்டையைப் பெறுவதற்கான வழி

tamillk
 (srilanka tamil news)

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.


ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் திரு.பிரதீப் சபுதந்திரி இதனைத் தெரிவித்தார்




இதன்படி, கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட 40 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள், வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டவர்கள் மற்றும் பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெறாதவர்கள், இதற்கு விண்ணப்பிக்கவும்.


இது தொடர்பான மேலதிக தகவல்களை பிரதேச செயலக அலுவலகங்களில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்