சியம்பலாண்டுவ எகந்திபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்போவ பிரதேசத்தில் பன்னல்கம நீர் இருப்பில் இருந்து மூன்று கிலோமீற்றர் தொலைவில் கடந்த (22) காட்டு யானை குட்டி ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காப்புக்காடு ஒன்றில் காணப்பட்ட இந்த காட்டு யானைக்குட்டி 05 அடி உயரம் கொண்ட 5 வயதுடைய யானை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யானையின் தோள்பட்டை அருகே துப்பாக்கிச் சூட்டுக் காயம் காணப்பட்டது.
இந்த யானையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நேற்று (23) அம்பாறை வனவிலங்கு கால்நடை வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டது.
Tags:
srilanka



