காணாமல் போன ஒருவரின் சடலம் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்டுள்ளது!

tamillk.com


ஏழு நாட்களாக காணாமல் போயிருந்த ஆண் ஒருவரின் சடலம் நேற்று (23) பசவறு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


அண்மையில் (18ஆம் திகதி) நாவுல, முருதொலுவ, மெயில்பிட்டிய, இல. 50 இல் வசிக்கும் மிகோல் கெதரவைச் சேர்ந்த கிரிஹபுவா (74) என்ற நபர், அவரது வீட்டில் இருந்து காணாமல் போனதாக அவரது உறவினர் நாவுல பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.


நாவுல பொலிஸாரும் கிராம மக்களும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது காணாமல் போனவரின் சடலம் அவர் வசித்த வீட்டிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தொலைவில் உள்ள காப்புக்காடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


உயிரிழந்தவர் ஆறு பிள்ளைகளின் தந்தை எனவும் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவின் கீழ் நாவுல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்