கதிர்காமம் கந்த வீதியிலுள்ள வாகன தரிப்பிடத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தப்பிச் சென்றுள்ளனர்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரதீப் லக்மால் என்ற 46 வயதுடைய தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளரே இந்த துப்பாக்கிச் சூட்டில் இலக்காகியுள்ளார்.
அவரது வலது காலின் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடந்த போது அவருடன் மற்றொரு நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கதிர்காமம் பிராந்திய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்திகள்



