கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஞ்சிகாவத்தை பகுதியில் பொலிஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தி உதிரிபாகங்களை அகற்றி தீ வைத்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18, 31 மற்றும் 46 வயதுடைய மாளிகாவத்தை மற்றும் கொழும்பு 12 பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரையும் நேற்று (ஏப்ரல் 19) கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (ஏப்ரல் 20) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
srilanka



