( jaffna news-tamillk ) யாழ்ப்பாணம் தையிட்டியில் இராணுவத்தினரால் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த நான்கு பெண்கள் உட்பட ஒன்பது பேர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விகாரியை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விகாரைக்கு சற்று தூரத்தில் ஒன்று இணைந்து இந்த போராட்டத்தை மேற்கொண்ட போது.
அவ்விடத்திற்கு வருகை தந்திருந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் இவ்விடத்தில் யாரும் சட்ட விரோதமாக ஒன்று கூட முடியாது தயவு செய்து இவ்விடத்தை விட்டு கலைந்து செல்லுமாறு பணித்துள்ளனர்.
இந்த நிலையில் இதனை மீறி நின்றவர்களை சட்டவிரோதமான முறையில் கூடி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் முனைந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த செயல்பாட்டின் போது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தனியார் காணியில் ஒன்றில் நின்று கொண்டிருந்த வேலை பொலிஸார் அவரை வலுக்கட்டாயமாக அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தினார்கள்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 9 பேரையும் இன்று மாலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
எனினும் ஊடகங்களில் செல்வராஜா கஜேந்திரன் கைது செய்யப்படவில்லை என தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.



