வவுனியாவில் பட்டானிசூர். பகுதியில் இரும்பு கம்பி மற்றும் பொல்லுகளால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவமானது நேற்றையதினம் (29.5.2023) மாலையில் நடைபெற்றுள்ளது.
குறித்த மாணவன் பள்ளிவாசலில் தொழுகையினை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் நிலையில் அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர் குறித்த மாணவர் மீது இரும்பு மற்றும் பொல்லுகளால் மிகக் கடுமையாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவனை மீட்டெடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்
.
இதன் போது சம்பவத்தில் படுகாயம் அடைந்த மாணவன் 18 வயதான சு.சுகைர் அகமட் என்பவர் ஆவார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
Vavuniya-news



