முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மன்னாரில் அனுஷ்டிப்பு



முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை இன்று (18) மன்னாரில் உணவுப்பூர்வமான  தமிழ் மக்களினால் அனுஷ்டிக்கப்பட்டது.


இந்த நிகழ்வை தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றது.


இந்த நிகழ்வின் போது முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதோடு நிலவேந்த நிகழ்வும் இடம்பெற்றது.


இந்த நிகழ்வானது தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மத தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்கள் நினைவுகூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலியும் செலுத்தினார்.



அதேபோன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக தமிழின படுகொலை அஞ்சலி நிகழ்வுகளுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.



தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக இன்று மே 18 எனும் தொனிப்பொருளில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு வெள்ளை நிறக் கொடி மற்றும் வெள்ளை நிற தோரணங்கள் என பறக்க விடப்பட்டது.



வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்று வருகிறது.





புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்