வெலிகம - அக்குரஸ்ஸ வீதியில் உள்ள பிடதெனிய என்ற இடத்தில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்னால் துரத்திச் சென்ற இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
ப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கமல் சமிந்த என்பதுடன் அவரது சடலம் மாத்தறை பொது வைத்தியசாலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த தந்தையுடன் வந்த மகனும் மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்து ஓடிய போது அவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்திகள்