வவுனியாவில் கிராம அலுவலகத்தில் பழுதடைந்த அரிசியை சுகாதார பரிசோதகர் பிரிவினர் மீட்பு

 

மக்களுக்காக வழங்கப்பட இருந்த வவுனியா கூமாங்குளம் கிராம அலுவலகத்தில் அரிசியானது பாவனைக்கு அவ்வாத நிலையில் காணப்பட்டதாக தெரிவித்து பிடித்த களஞ்சியத்தை சுகாதாரபரிசோதகர் பிரிவினர் சீல் வைத்துள்ளனர்.



வறுமைக்கோட்டிற்குட்பட குடும்பங்களுக்காக அரசாங்கத்தினால் 10 கிலோ அரிசி பை வழங்குவதற்கா வவுனியா கூமாங்குளம் அலுவலக பிரிவுக்கு வவுனியா பிரபல அரிசி ஆலையில் இருந்து ஒப்பந்தப்படி (26.05.2023) 4860 கிலோ அரிசி அலுவலகத்தில் இறக்கப்பட்டிருந்தது.



 இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டு இருந்த அரசியல் மக்களுக்கு வழங்குவதற்காக கிராம அலுவலகத்தில் மேற்கொண்டிருந்த போது அவ்வாறு பெற்றுச் சென்ற மக்கள் இந்த அரிசி பாவனைக்கு உகந்தது அல்ல என்பதை அறிந்து வவுனியா சுகாதார பரிசோதனை பிரிவுக்கு தகவல் வழங்கினார்கள்.



இதையடுத்து வவுனியா சுகாதார பரிசோதனை பிரிவினர் கிராம அலுவலகத்தில் கலைஞ்சயத்தில் வைக்கப்பட்டிருந்த அரிசியை பரிசோதனை செய்த பின்பு.


 

அரிசியுடன் குறித்த மண்டபம் சமூர்த்தி உத்தியோகத்தர் ம.விக்கினேஸ்வரன் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் முன்னினையில் பொது சுகாதார பரிசோதகர் கே.சிவரஞ்சனினால் சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்