( srilanka tamil news-tamillk ) சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ 'மவ்பிம'விடம் தெரிவித்தார்.
ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவின் கருத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மத முரண்பாடுகளை உருவாக்கி நாட்டின் நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கக் கூடிய வகையில், பொறுப்பற்ற முறையில் போதகர் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இவரது இந்த கருத்துக்கு கத்தோலிக்க திருச்சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, கத்தோலிக்க திருச்சபைக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



