இன்று (27) கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற சடங்கின் போது வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் அந்த பாடசாலையின் 07 மாணவர்கள் கெக்கிராவ பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெக்கிராவ புறநகர் பகுதியிலுள்ள பிரபல தேசிய பாடசாலையொன்றில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வின் போது, அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் குழுவொன்று இவ்வாறு கலவரமாக நடந்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கலவரமாக நடந்து கொண்ட அந்த மாணவர்கள் பீரித் மண்டபத்தையும் தாக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
Tags:
srilanka



