அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று முதல் அலுவலக நேரங்களில் இரண்டு மணித்தியாலயம் டெங்கு ஒழிப்புக்கான திட்டம் ஒன்று நடைமுறைக்கு வரவுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி அரச நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பதற்கான திட்டத்தில் 2 மணித்தியாலயம் ஒதுக்கப்பட வேண்டும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு அமைய அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல பகுதிகளில் டெங்கு நோயளர்கள் அதிகரித்து வரும் காரணத்தால் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை அனைத்து பகுதிகளிலும் உரியவகையில் முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:
srilanka



