வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை விரைவில் டிஜிட்டல் மயமாக்க அரசை வலியுறுத்தல்

tamillk


(srilanka tamil news) புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை விரைவில் டிஜிட்டல் மயமாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி காலியில் பல பெண்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து மே தின ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.


கிராமிய பெண்கள் முன்னணி, மல்லிகைப் பெண்கள் அமைப்பு, காலி வியாரிகா பெண்கள் அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி காலி நகரில் சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், காலி மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் பெண்கள் அமைப்புக்கள் ஒன்று கூடினர்.


சந்தேகத்திற்கு இடமின்றி வெளிநாட்டு வேலை வாய்ப்பில் ஈடுபட வழிவகை செய், டாலர்களை கொண்டு வரும் பெண்களை பாதுகாக்க, வெளிநாட்டு வேலைகளை டிஜிட்டல் மயமாக்கு, அதிகாரிகளின் ஆள் கடத்தலை தடுக்க, டிஜிட்டல் மயமாக்கு போன்ற வாசகங்களை வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். 

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்