(srilank tamillk news) டெங்கு வைரஸ் பரவி வருவதாக சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது நாட்டில் மூன்று வகையான டெங்கு நோய் வைரஸ் காணப்படுவதனால் ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக டெங்கு பரிசோதனை செய்வதன் மூலம் காய்ச்சலை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்
இதேவேளை, தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பரவுவதற்கான அபாயம் காணப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் பிரகன வைத்திய அதிகாரி கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதேபோன்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சி நிறுவனம்நடத்திய டெங்கு பரிசோதனையில் மூன்று வகை வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கான தற்போதைய நிலையில் நோய் எதிர்ப்பு சக்திக்கான ஆன்டிபாகள் இல்லை. நோய் பரவுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே நாட்டு மக்களுக்கு காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் காணப்படும் நிலையில் உடனடியாக இரத்த பரிசோதனை செய்ய வேண்டும். இந்த நிலையில் மருத்துவமனைக்கு தாமதமாக வரும் நிலையில் உயிருக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கருத்து தெரிவிக்கையில்,
கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் சுமார் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் இதில் சுமார் 15 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
இருந்தாலும் கடந்த ஆண்டுகளுக்கு ஒப்பிடும் நிலையில் இது மிகவும் கடுமையான பிரச்சினையாக காணப்படுகிறது 2023 முதல் மூன்று மாதங்களில் வேகமாகவும் அதிகரித்து வருவதாகவும் கூறினார்.



