ஜூலையில் மின் கட்டணம் குறையுமா? அதிகரிக்குமா?

 

tamillk

(srilanka tamillk news) எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் மின் கட்டணங்கள் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தம் செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


டுவிட்டர் செய்தியில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


காஞ்சனா விஜேசேகரவின் டுவிட்டர் செய்தியின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின் கட்டணத்தை மறுஆய்வு செய்து திருத்தும் அரசாங்கத்தின் முடிவின்படி இந்த திருத்தம் செய்யப்படுகிறது.


இது அரசின் கொள்கை மற்றும் 2022 டிசம்பரில் எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவின்படி செய்யப்படும்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்