( srilanka tamil news-tamillk ) கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி வீதி, இரத்மலானை பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று (மே 22) ஹோட்டலுக்கு பலாப்பழம் விற்பனை செய்ய வந்த நபருக்கும் ஹோட்டலின் உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறின் காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
படுகாயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஹபுகஸ்தலாவ, அஹஸ்வெவ வீதியில் வசிக்கும் 29 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
கொலையை செய்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை
கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
srilanka



