வெசாக் பண்டிகைக்கு சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவைகள்(srilanka tamil news)



 (srilanka tamillk news) வெசாக் விடுமுறையை முன்னிட்டு விசேட பஸ் மற்றும் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப சகல போக்குவரத்து வசதிகளையும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.


வெசாக் விடுமுறையை முன்னிட்டு இன்று (மே 5) முதல் பதுளை மற்றும் அநுராதபுரத்திற்கு பல ரயில் பயணங்கள் இயக்கப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே. இண்டிபோலேஜ் தெரிவித்தார்.


மேலும், ஞாயிற்றுக்கிழமை (மே 7) மீண்டும் அநுராதபுரத்திலிருந்து கொழும்பு கோட்டை மற்றும் பெலியத்த வரை இரண்டு புகையிரத பயணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை மற்றுமொரு புகையிரதம் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


இந்த விஷேட ரயிலை இயக்குவது மட்டுமின்றி சாதாரண ரயில் போக்குவரத்தும் எவ்வித பிரச்சனையும் இன்றி நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


வெசாக் பண்டிகையின் போது பஸ் பயணிகளுக்காக விசேட பஸ் சேவைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலன் மிரெண்டா தெரிவித்தார்.


இந்த பஸ் சேவைகள் கொழும்பில் இருந்து வெளி மாகாணங்களுக்கும், வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கும் இயக்கப்படுவதாகவும், நீண்ட தூர மாகாண லங்கா மற்றும் தனியார் பஸ் சேவைகள் வழமை போன்று இயங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்