கட்டுநாயக்கவிற்கு வந்த இரண்டு விமானங்களுக்கு என்ன நடந்தது

(srilank tamillk news)  கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த இரண்டு விமானங்கள் மோசமான வானிலை காரணமாக மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.


கட்டுநாயக்க பிரதேசத்தில் நேற்றிரவு கடும் மழை பெய்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


முதலாவது விமானம் 297 பயணிகள் மற்றும் 15 விமானக் குழு உறுப்பினர்களுடன் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து வந்தடைந்தது மற்றும் விமானம் நேற்று இரவு 11.35 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியது.


விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் தற்போது பஸ்கள் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், மாலைதீவின் மாலேயில் இருந்து வந்த விமானமும் நள்ளிரவு 12.02 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்