மனைவிக்கு அளவுக்கு அதிகமாக இன்சுலின் கொடுத்து கொல்ல முயன்ற மருத்துவர் கைது!

 

tamillk.com

(srilanka tamil news)

அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்தை உட்கொண்டு மனைவியைக் கொல்ல முயன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குறித்த பெண் ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது சுகவீனம் சந்தேகத்திற்குரியது என்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


அங்கு, பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள், இன்சுலின் மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால், உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.


இதன்படி, குறித்த பெண்ணின் கணவர் நேற்று (ஏப்ரல் 30) ​​பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வைத்து மேலதிக விசாரணைகளின் போது அதிகளவு இன்சுலின் உட்கொண்டமை தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 5, லயர்ட்ஸ் வீதியில் வசிக்கும் 33 வயதுடையவர் எனவும் அவர் திருகோணமலை அரச வைத்தியசாலையில் வைத்தியர் எனவும் தெரியவந்துள்ளது.


சந்தேகநபர் போதைப்பொருளை உட்கொள்வதற்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் சிரிஞ்ச் ஊசி ஒன்றும் சந்தேகநபரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சில நாட்களுக்கு முன்னர் அவர் போதைப்பொருளை உட்கொண்டமை தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


நோய்வாய்ப்பட்ட பெண் களுபோவில வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் இன்று (மே 1) அளுத்கடை இலக்கம் 3 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்