( jaffna news-tamillk ) யாழ்ப்பாணத்தில் இருந்து கொழுப்பு நோக்கி பயணத்தை மேற்கொண்ட சொகுசு பேருந்து ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் வைத்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று (30.06.2023 ) அதிகாலை மதுரங்குளி-கரிகட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பேருந்து திடீரென்று தீப்பிடித்து தெரிந்ததில் சொகுசு பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த விபத்தில் போது பேருந்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தீ விபத்துக்கான காரணம் இதுவரைக்கும் தெரிய வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



