வான்வெளியில் தோன்றவும் அதிசயம்: சூப்பர் மூன்

tamillk


இந்த ஆண்டுக்கான மிகப்பெரிய சூப்பர் மூன் ஜூலை மாதம் வான்வெளியில் தோன்ற உள்ளது இதனை விண்வெளி ஆய்வகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் நாம் சந்திக்கும் நான்கு சூப்பர் மூன்களில் ஜூலை மாதம் வர இருக்கும் பக் மூன் என அழைக்கப்படும் சூப்பர் மூனும்  ஒன்றாகவும்காணப்படுகிறது.



இவ்வாறு தோன்ற உள்ள சூப்பர் மூன் ஆனது எமது பூமிக்கு மிக நெருக்கமாக வர இருக்கும் இரண்டாவது சூப்பர் மூன் என்று விண்வெளி அறிவியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

இந்த சூப்பர் மூன் தென்படும் திசையானது ஜூலை 3 ஆம் திகதி அன்று தென்கிழக்கு திசையில் இருந்து இரவு 7.13 மணிக்கு உதயமாகும்.



இதனைத் தொடர்ந்து மதியம் 1:25 மணி வரைக்கும் அது தென்மேற்கு நோக்கி செல்வதற்கு முன் அது அடையும் வானத்தில் மிக உயர்ந்த புள்ளியாக மெரிடியனில் உச்சம் பெறும். மற்றும் ஜூலை 4 ஆம் திகதி காலை 7:40 மணிக்கு சூப்பர் மூன் தெரியும் என கூறப்படுகிறது.

இந்த சூப்பர் மூன் ஆனது சிங்கப்பூரிலும் தெரியும் என்றும், அன்றைய தினம் சிங்கப்பூர் முழுவதும் இரவு 9 மணி முதல் வானில் நிலவு தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த சூப்பர்மூனை நீங்கள் வெறும் கண்களாலும் காண முடியும்.. இருப்பினும்  வளிமண்டல நிலைமைகள் மற்றும் உங்கள் இருப்பிடங்கள் எவ்வாறு வளிமண்டலம் இருக்கின்றதோ அதை பொறுத்தே நிலவின் தோற்றம் மாறுபடலாம் என்று விண்வெளி ஆய்வகம் கூறுகிறது.

தோன்றவுள்ள நிலவானது பூமிக்கு மிக அருகில் தோன்ற உள்ளதால் மிகவும் பெரிதாகவும் மிகப் பிரகாசமாகவும் காணப்படும்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்