வவுனியாவில் காத்தார் சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் ஒன்றை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று (28.06.2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெற்றோர்கள் அதிர்ச்சி
குறித்த இளைஞனின் பெற்றோர்கள் காலையில் வெளியில் சென்றுவிட்டு மதியம் அளவில் வீடு திரும்பும் போது வீட்டின் பின்புறத்தில் குறித்த இளைஞனின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டெடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் போது உயிரிழந்த 23 வயதான அயந்தன் என்ற இளைஞன் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதோடு குறித்த இளைஞன் இன்று காலை வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியிந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
Vavuniya-news



