வவுனியாவில் 400 மில்லியன் அமெரிக்கன் டொலர் முதலீட்டில் சீனி உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு தாய்லாந்து நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பாரிய திட்டத்திற்கான அங்கீகாரத்தை அமைச்சரவையில் இருந்து கிடைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக வவுனியாவில் உள்ள 200 ஏக்கர் காணியில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் முதலீட்டு ஊக்குவித்தல் மற்றும் சீனி கைத்தொழில் ஊக்குவிக்கும் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
தாய்லாந்தின் சுடேச் சுகர் நிறுவனத்திற்காக வவுனியா மாவட்டத்தில் பறந்த நிலப்பரப்பு ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த பாரிய திட்டத்தின் மூலம் 20% அல்லது 120,000 மெட்ரிக் தொன் சீனி உற்பத்தியை செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலமாக இலங்கையில் சர்க்கரையின் தேவைகளை கணிசமான அளவில் பூர்த்தி செய்ய முடியும் எனவும் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட திட்டத்திற்காக வவுனியாவில் உள்ள 200 ஹெக்டேர் கொண்ட நிலப்பரப்பை பசுமை வயல் சர்க்கரை மேம்பாட்டுத் திட்டத்திற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.



