டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் மீட்கப்பட்டது

Titan-tamil news


டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் ஐந்து பேருடன் பயணம் செய்த நிலையில் இந்த டைட்டன் காணாமல் போனது.

இந்த நிலையில் காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கி கப்பல் உடைந்து இருக்கலாம் என நம்பப்படும் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.



கடலுக்குள் அடியில் தீவிர தேடுதல் நடவடி செய்யும் போது டைட்டானிக் கப்பலில் இடுப்பாடுக்குள் அருகில் குறித்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறித்த டைட்டன் நீர் மூழ்கி கப்பலுக்குள் பொருத்தப்பட்டிருக்கும் ஆக்சிஜனின் அளவு தீர்ந்துவிடும் முன்பு கப்பலை கண்டுபிடிப்பதற்காக மீட்பு குழுவினர் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.



இந்த நிலையில் தற்போது தேடுதல் பணியில் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவம்

இவ்வாறு காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கி கப்பல் ஆனது கடலுக்குள் அழுத்தம் தாங்காமல் உள்நோக்கி வெடித்திருக்கலாம் என நம்மப்படுகிறது. இதில் பயணம் செய்த ஐந்து நபர்களும் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் காணாமல் போன நீர் மூழ்கி கப்பலில் தேடுதல் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்