யாழ்ப்பாணம் கொடிகாமம் ஏ9 வீதியில் தனியார் பேருந்து ஒன்றும் ஹயஸ் வாகனமும் விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்து சம்பவம் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தும். கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வாகனமும் கொடிகாமம் வீதியில் வைத்து குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தின் போது ஒன்பது பேர் படுகாயம் அடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



