மாணவன் மீது ஆசிரியர் மூர்க்கத்தனமாக தாக்குதல்


srilanka news


வயங்கொடை பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலையொன்றின் சித்திர ஆசிரியர் ஒருவர் பதின்மூன்று வயது மாணவனை கழுத்தைப் பிடித்து இழுத்து தலை மற்றும் காதுகளில் தாக்கியதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த முறைப்பாடு தொடர்பான மேலதிக விசாரணைகளை வயங்கொடை பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அனுப்பி வைத்துள்ளது.




தாக்குதலுக்கு உள்ளான மாணவர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மாணவன் மேசையில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்ததைக் கண்ட கலை ஆசிரியர் காரணமின்றி மாணவனிடம் வந்து தாக்கியதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.




இது தொடர்பான விசாரணைகளை வெயாங்கொடை பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்