தொடருந்தில் முன் பாய்ந்து பரிதாபமாக ஓர் இளைஞன் உயிரிழப்பு

srilanka tamil news-tamillk


மருதாணையிலிருந்து மாத்தறை நோக்கி புறப்பட்டு கொண்டிருந்த தொடருந்தில் மோதப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவமானது ஹபராதுவை தொடருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.



நேற்றைய தினம் (25.06.2023) ஞாயிற்றுக்கிழமை குறித்த இளைஞன்  மருதாணையிலிருந்து மாத்தறை நோக்கி சென்று கொண்டிருந்த தொடருந்து முன் பாய்ந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



இவ்வாறு உயிரிழந்த இளைஞன் 26 வயது உடையவர் எனவும் தெரியவந்ததை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹபராதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்