நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை! தினமும் 100 பேர் அகலம் மரணம்

srilanka news


நாட்டில் சிகரெட் மற்றும் மதுபான பாவணையால் தினமும் 100 பேர் அகால மரணம் ஆகின்றார்கள் தகவலை, மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தற்போது சர்வதேச புகையிலை நிறுவனங்கள் கஞ்சாவை வியாபாரம் செய்வதற்கு மூலோபாயமாக பெருந்தொகை பணத்தினை முதலீடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.



கஞ்சா பாவனையே முதலீட்டு திட்டமாக இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை என தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.



இந்த நிலையில் நாட்டில் உள்ள சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியோர்களை போதை பொருள் பாவணையில் இருந்து காப்பாற்றுவதற்காக அனைவரினதும் பங்களிப்பு மிகவும் அவசியமாக இத் தருணத்தில் தேவைப்படுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் அறிவித்துள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்