பாடசாலை கட்டிடத்தின் மீது மரம் விழுந்ததில் 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

 

srilanka tamil news

( srilanka tamil news-tamillk ) கேகாலை அகிரியாகலை கனிஷ்ட கல்லூரி மைதானத்தில் பலா மரமொன்று காற்றினால் கட்டிடம் ஒன்றின் மீது வீழ்ந்ததில் 8 மாணவர்கள் காயமடைந்து கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.


வகுப்பறை கட்டிடத்தின் மீது விழுந்த பலா மரம் மேற்கூரையில் இருந்த ஓடுகளை உடைத்து 4ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் தலையில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.



பின்னர், காயமடைந்த எட்டு சிறுவர்கள் முச்சக்கரவண்டிகள் மூலம் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஏழு மாணவர்களும் ஒரு மாணவியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்