யாழ்ப்பாணத்தில் கொக்குவில் குளப்பிட்டி விபச்சார விடுதியாக இயங்கிவந்த வீடு ஒன்றினை பொதுமக்கள் ஒன்றிணைந்து முற்றுகையிட்ட போது இதில் பெண்கள் உட்பட மூவரை மடக்கி பிடித்துள்ளனர்.
பொதுமக்களால் குளப்பிட்டி சாந்தியிலிருந்து ஆனைக்கோட்டை செல்லும் வீதியில் குறித்து விபச்சார விடுதியாக செயல்பட்டு வருகின்றதை பொலிஸாருக்கு முறைப்பாடுகள் செய்துள்ளனர்.
எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் கண்டுகொள்ளாத நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து குறித்த வீட்டினை முற்றுகையிட்ட போது இரு பெண்களையும் ஒரு ஆணையும் கையும் களவுமாக மடக்கி பிடித்துள்ளனர்.
மேலும் விடுதியை சோதனை செய்தபோது அப்பகுதியில் இருந்து பின்புறமாக மேலும் இருவர் தப்பி ஓடியதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் ஆதங்கம்
இவ்வாறான விடுதிகள் யாழ்ப்பாணம் குளப்பிட்டி சாந்தி தொடக்கம் ஆனைகோட்டை பகுதி வரை வரிசையாக இவ்வாறான முறையற்ற விடுதிகள் இயங்கிக் கொண்டு வருவதாகவும். இவற்றுக்கு எதிராக எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில் குளப்பிட்டி கிராம மக்களால் பிடிபட்ட மூவரையும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனையடுத்து ஒப்படைக்கப்பட்ட மூவரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.