மட்டக்களப்பில் ஏற்பட்ட விபத்தில் - 6 வயது சிறுவன் பலி

 

Batticaloa accident

மட்டக்களப்பு - வாழைச்சேனை ரிதிதென்ன பிரதேசத்தில் குடிபோதையில் சாரதி செலுத்திய பௌசரில் மோதுண்டு 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பதற்றமான சூழ்நிலை

நேற்று (29) இரவு இடம்பெற்ற இந்த விபத்தின் பின்னர் விபத்தை ஏற்படுத்திய பௌசருக்கு பிரதேசவாசிகள் தீ வைத்துள்ளமையினால் அங்கு பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

மது போதையில்

இந்த பௌசரின் சாரதியும் உதவியாளரும் மதுபோதையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற போது, ​​சைக்கிளில் வந்த சிறுவனையும் அவரது மூத்த சகோதரரையும் மோதியுள்ளனர்.



பின்னர், பௌசரின் சாரதியும் உதவியாளரும் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் பிரதேசவாசிகள் அவர்களைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.



விபத்தின் பின்னர், பொலிஸாரின் தலையீட்டினால் பிரதேசத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலைக்கு தீர்வு காணப்பட்ட நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்