முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளது


Mullaithivu tamil news


முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்று வருகிறது.

 சர்வதேசமே எமக்காக குரல் கொடு என்ற தொனிப்பொருளில் முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் சற்றுமுன் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகியுள்ளது.


குறித்த ஆர்ப்பாட்டத்தை வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம்  முன்னெடுத்துள்ளது.

Mullaithivu tamil news


நீதி கோரி 

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும், சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது இடம்பெறுகிறது.



 கவனயீப்பு பேரணியானது, முல்லைத்தீவு நீதிமன்றுக்கு முன்பாகச் சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட செயலகத்தை சென்றடையவுள்ளது.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்