பயணிகளுடன் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து ( video )

bus accident-tamillk news


கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


தெமோதரை நீர் விநியோக சபைக்கு அருகில் இன்று (15) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



பேருந்து செல்லும் திசைக்கு எதிரில் வந்த சிறிய ரக வாகனமொன்றில் மோதுவதை தடுப்பதற்கு பேருந்து சாரதி மேற்கொண்ட முயற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து குடைசாய்ந்துள்ளது.



பேருந்தில் பயணித்த 15 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும்.அங்கிருந்த மக்களின் உதவியுடன் பேருந்தில் பயணித்த பயணிகளை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு காயமடைந்தவர்கள் பதுளை பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



மேலும் இது தொடர்பான செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்