மெக்சிக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: உயிர் சேதம் ஏற்படவில்லை

Powerful earthquake in Mexico


அமெரிக்காவின் மெக்சிக்கோவில் நேற்று(14.07.2023) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்து நிலநடுக்கம் தொடர்பாக ஜேர்மனி புவியறிவியல் ஆய்வுமையம் தெரிவிக்கையில்.



''மெக்சிக்கோவில் சிபாாஸ் கடலோரப் பகுதியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இதுவரைக்கும் கிடைக்கவில்லை.



புவித்தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் போது ''நெருப்புவளையம்'' என்றழைக்கப்படும் பகுதியில் மெக்சிக்கோ அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதாகும்  குறிப்பிடப்படுகின்றது.   

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்