( vavuniya news-tamillk ) வவுனியாவில் இன்று(05.07.2023) அதிகாலை மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த விபத்து சம்பவமானது வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அன்னையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம்
குறிப்பிட்ட விபத்தானது வவுனியா நகரில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்துக் கொண்டிருந்த கனரா வாகனத்தினை முந்தி செல்வதற்கு முற்பட்டபோது எதிர் திசையில் இருந்து வந்து கொண்டிருந்த வேணுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து ஏற்பட்ட போது மோட்டார் சைக்கிள் 600 மீற்றர் தூரத்திற்கு வீசப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதியான 24 வயதுடைய ருபீன்ஸ்ராஜ் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலத்தை வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டதோடு குறித்த விபத்தின் வாகனங்கள் மூன்றையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டதோடு மேலதிய விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.