வவுனியா ஓமந்தையில் கோர விபத்து - ஒருவர் சம்பவ இடத்திலே பலி மேலும் ஒருவர் காயம்

vavuniya tamil news


( vavuniya news-tamillk)  வவுனியா ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில்  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில்  வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தானது இன்று (30) காலை இடம்பெற்றுள்ளது.


விபத்து சம்பவம்

இன்று அதிகாலை ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகாமையில் நின்றிருந்த உழவு இயந்திரம் மற்றும் பழுதடைந்து நின்று கொண்டிருந்த கப்ரக வாகனம் ஆகியவற்றுடன் அதே திசையில் பயணித்த லொறி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

இளைஞர் பலி

குறித்த விபத்து ஏற்பட்ட போது  கப்ரக வாகனத்தில் இருந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



 இந்த விபத்தில் 23வயதுடைய இராமச்சந்திரன் சதீஸ்குமார் என்ற இளைஞர்  பலியாகியுள்ளார்.



  மேலும் விபத்து தொடர்பான விசாரனைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்