வவுனியாவில் இரு இளைஞர்கள் ஹெரோயினுடன் கைது!

vavuniya news

( vavuniya news-taamillk ) வவுனியாவில் இரு வேவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் அதிரடியான சோதனை நடவடிக்கைகளின் ஈடுபட்ட வவுனியா பொலிஸார் ஹெரோயினுடன் இளைஞர்கள் இருவரை  கைது செய்துள்ளனர்.




வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின் போது கூமாங்குளம் பகுதியில் 5கிராம் 140மில்லிகிராம் கரோயினுடன் இளைஞர் ஒருவரையும் வேப்பங்குளம் பகுதியில் 5கிராம் 100மில்லிகிராம் கரோயினுடன் இளைஞர் ஒருவரும் என இருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.



கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் மேலதிக விசாரணைகளை பொலிஸார்  உட்படுத்தப்பட்டு  மற்றும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினையும் வவுனியா மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

 

மேலும் இது தொடர்பான செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்