(Srilanka tamil news-tamillk ) இலங்கை நாட்டினது கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு குருந்தூர் மலையில் இனமோதலை உருவாக்க முயன்ற தமிழ் அரசியல்வாதி துரைசாரா ரவிகரன் மற்றும் தமிழ் பிரமுகர்களை சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
எனவே குருந்தூர் மலை விவகாரத்தில் தொடர்பாக தலையிட்டு சிங்கள மக்களை அவமதித்துள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றவேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கோரியுள்ளார்.
தனது டுவிட்டர் தளத்திலும் இது தொடர்பிலான பதிவை அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
“குருந்தூர் மலையில் அமைந்துள்ள பௌத்த ஆலயத்தை அழிக்க முயன்றவர்களை சந்தித்துள்ளார் கனடா உயர்ஸ்தானிகர்.
இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாத நபராக "Non Grata" அவரை அறிவிக்கவேண்டும். இலங்கையில் 2000 வருடத்திற்கு மேற்பட்ட பௌத்த ஆலயத்தை அவர்கள் அழிக்க முயன்றனர்.
அவர்களை இவர் சென்று சந்தித்துள்ளார். உயர்ஸ்தானிகரின் இந்த செயலானது, இராஜதந்திர சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்ட மிகவும் அவமானகரமான செயலாகும்.
ஆகவே ஒரு சர்ச்சைக்குரிய செயல் என்பதால் கனடா உயர்ஸ்தானிகரை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாத நபர் என அறிவிக்கவேண்டும் என பரிந்துரை செய்வதாக” சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
Yesterday t #Canadian High Commissionr visitd t North & met t #Tamil people & their politicians (Raviharan) who tried to create a communal/ religious conflict at #Kurundi
— Sarath Weerasekera (@ReAdSarath) July 20, 2023
They tried to destroy t Dagaba (Temple) which is more than 2000 years old & he goes and meets them#SriLanka pic.twitter.com/FpdnuUjSZ9



