இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் உயிரை பறிக்கும் லோடியா மீனினம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

srilanka tamil news

லோடியா எனும் ஆபத்துக்குரிய மீனினம் இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இருந்து தெற்கு கடற்பரப்பில் பரவியுள்ளதாக தேசிய விஷகட்டுப்பாட்டு மையம்  நாட்டின் மக்களுக்கு அறிவித்துள்ளது.


கடுமையான விஷம்

இம்மீனினம் மனித உடலில் படும்போது உயிரிழப்புக்களை ஏற்படுத்தலாம் என விஷ கட்டுப்பாட்டு மையத்தின் பிரதம நிபுணர் வைத்தியர் ரவி ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.



அத்துடன் இவ்வகை மீனினங்களை ஜூலை முதல் செப்டம்பர் வரை கடலில் காண முடியும் என கூறினார்.


இதுகுறித்து வைத்தியர்கள் மேலும் தெரிவிக்கையில்


“இந்த மீன் ஒரு சிறிய பலூனைப் போலவும், வயிற்றில் நீளமான நுாலை போன்ற சுரப்பிகளைக் கொண்டதாக காணப்படும்.



மேலும், இந்த மீனை தொடுவதனால், ஒரு நபர் ஒவ்வாமையிலிருந்து உயிரச்சுறுத்தல் நிலைக்குச் செல்லலாம் நிலைமை ஏற்படலாம் எனவும்.


பாதிப்பு

இதன் மூலம் நரம்பு மண்டலம், இதயம் மற்றும் சுவாச மண்டலம் பாதிக்கப்படலாம்” என அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  


எனவே கடலோர மக்கள் பாதுகாப்பாகுடனும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.     

மேலும் இது தொடர்பான செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்