தெற்கில் மூன்று பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு

srilanka-tamillk news


 அம்பலாங்கொடை, அஹுங்கல்ல மற்றும் மெட்டியகொட பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பை பலப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


அதன்படி பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் அதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கொலைகள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் காரணமாக இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது ஊரகஸ்மன்ஹந்திய போகஹவெல பிரதேசத்தில் வெறிச்சோடிய வீடொன்றில் இருந்து பல இராணுவ சீருடைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




இந்த வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்தவர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், உரிய இராணுவ சீருடைகள் ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்